1809
நெப்போலியப் போர்கள்: ஆஸ்த்திரியப் படை பவேரியாவை ஊடுருவியது.
1815
இந்தோனேசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் உயிரிழந்தனர்.
1821
கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி உதுமானிய அரசினால் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் பொசுபோரசு நீரிணையில் எறியப்பட்டது.
1826
துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1858
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் 14.5 தொன் பிக் பென் மணி சோதனையின் போது வெடித்ததை அடுத்து, தற்போதைய 13.76 தொன் மணி அமைக்கப்பட்டது.
1864
முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
1868
அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய – இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1872
முதலாவது மர நாள் நெப்ராஸ்காவில் கொண்டாடப்பட்டது.
1887
உயிர்ப்பு ஞாயிறு அன்று அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அனுமதி அளித்தார்.
1912
டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1941
இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
1963
ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.
1968
நியூசிலாந்தின் வாகைன் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்தில் புயலினால் தாக்கப்பட்டு மூழ்கியதில், 734 பேரில் 53 பேர் உயிரிழந்தனர்.1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 போர் வானூர்திகள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1973
சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108 பேர் உயிரிழந்தனர்.
1979
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1984
ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985
ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991
இத்தாலியின் மொபி பிரின்சு என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் உயிரிழந்தனர்.
1992
லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998
பெல்பாஸ்ட் உடன்பாடு: அயர்லாந்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த உடன்பாடு எட்டப்பட்டது.
2002
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார். உலக பத்திரிகையாளர் நாள்; உலக வரலாற்றில் ஒரு தமிழனின் பத்திரிகையாளர் மாநாடு உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் காத்திருந்த நாள்.
2006
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
2010
போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
2016
கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து: கேரளா பரவூரில் பண்டிகைக் கால வாணவெடிகள் வெடித்து தீ பரவியதில் நூற்றுக் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.





