நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடையானது, கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் மூலம் நடவடிக்கை தீர்க்கப்பட வேண்டும், அதே நேரத்தில் பிற நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கலாம் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று (26) தெரிவிக்கும் போதே வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ADVERTISEMENT