கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சகமான முறையில் நிலத்தை தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



