யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39 ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் கடந்த 21அம் திகதி இடம்பெற்றன.
ADVERTISEMENT
இதில் முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பௌத்த தேரரே இந்த பட்டம் பெற்றுள்ளார்.
உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து அவர் இந்த பட்டம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.