கொழும்பு மாநகர சபையில் இம்முறையும் பச்சைக்கொடி பறக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்குரிய முயற்சி கைகூடாத நிலையிலேயே தனித்துக் களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
“கொழும்பு மாநகர சபையை இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும். மேயர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.