சுமார் நான்காயிரம் போதை மாத்திரைகளுடன் போதை மாத்திரை வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்கா தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பத்ர்பள்ளி வீதியில் உள்ள வீட்டில் வைத்தே குறித்த போதை மாத்திரைகளை சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார் .
35 வயதுடைய நான்கு நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரையே இவ்வாறு நேற்றிரவு (16)பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரம் போதை பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் லலித் லீலிரத்னவின் வழிகாட்டலில் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் 4000 பொறுப்பதிகாரி ரத்னாயக்கவின் தலைமையில் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இப்போதை மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதிமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




