வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சற்றுமுன்வரை 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
பல்வேறு தரப்பினரும் கடற்படையிடம் புகாரளித்த போதும் அவர்கள் போதை பொருளை மட்டும் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவதாகவும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை இதுவரை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லையென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்படை முகாமிற்கு அருகாமையில் இருந்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கைது செய்யப்படாமை குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சமாச தலைவர் தங்கரூபன்(077 076 2049)
வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி றணசிங்க(+94 77 026 1034)