பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, அன்றைய தினம் கணேமுல்லவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பூஸா சிறைச்சாலையின் சிறைக் காவலரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.