இன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை ஆகில் பிரதேசத்தில் பெய்த கடும் மழை இடி மின்னலின் போது அப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் சேதம்.
இடி மின்னலின் கூடிய கன மழை பெய்த வேலையில் குடியிருப்பு பகுதியில் இருந்த மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு மற்றும் அருகில் இருந்த பார ஊர்தி சேதம் அடைந்து உள்ளதுடன் எவருக்கும் ஆபத்து இல்லை என்று பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இடம் பெற்ற வேலையில் அந்த குடியிருப்பில் மூன்று பேர் இருந்தனர் எனவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்பட வில்லை என்றும் அருகில் இருந்த பார ஊர்தி சேதம் அடைந்து உள்ளது என திம்புள்ள பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.


