ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த ஈரான் அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுசன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஐ.நா. அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமுல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க தொழிநுட்பக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.