சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளிலும் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (15) இடம் பெற்றது.
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வை திருகோணமலையில் இயங்கி வரும் ஈவின்ங்ஸ் பெண்களுக்கான சுதந்திர அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 07 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும் இடம் பெற்றிருந்தது. குறித்த செயலமர்வுக்கு வளவாளராக மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தீபானி கலந்து சிறப்பித்தார்.
பெண்கள் சிறுவர்கள் உரிமைகள் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் போதான நிலைமையின் போது செயற்படும் விதம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வழி முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குறித்த செயலமர்வின் போது கலந்துரையாடப்பட்டன.
இதில் குறித்த ஈவின்ங்ஸ் பெண்களுக்கான சுதந்திர அமைப்பின் தலைவி திருமதி காயத்திரி நளினகாந்தன், பெண் பொலிஸ் துறை சார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


