கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடர் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.
கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பத்மசிறீ கலந்து கொண்டு வீரர்களை அறிமுகம் செய்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
18கழகங்கள் குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றன.





