உலக கணித தினத்தை முன்னிட்டு வடமராட்சி யா/கெருடாவில் இ.த.க பாடசாலையில் கணித விளையாட்டுக்கள் செயற்றிட்டக் கண்காட்சி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு S.சுதாகரன் தலைமையில் நேற்று (14) முற்பகல் 08.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் கெருடாவில் இ.த.க பாடசாலை மாணவர்களின் பல்வேறு கணித விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் கணித அறிவை மேம்படுத்தும் நோக்கிலான மாணவர்களின் முயற்சிக்கு விருந்தினர்களால் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலையத்தின் கணிதம், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு T.சுஜுவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக, வடமராட்சி கல்வி வலையத்தின் கணித ஆசிரிய ஆலோசகர் திரு K.பிரபாகரன் அவர்களும், நிகழ்வின் கெளரவ விருந்தினர்களாக, ஓய்வு நிலை கணித மூலவளநிலையப் பொறுப்பாளர் திரு S.இராமகிருஷ்ணா, ஓய்வு நிலை உப அதிபர்
திருR.L தேவராஜா, ஓய்வு நிலை கணித உபமூலவளநிலையப் பொறுப்பாளர் திரு.S.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






