யாழ்ப்பாணம், கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளி பாலர்களின் பாலர் சந்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது சிறுவர்கள் தமது பொருட்களை ஆர்வத்துடன் சந்தைப்படுத்திய நிலையில் பலரும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.







