முல்லைத்தீவு பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று இரவு 10:00 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் (12.03.2025) பரந்தன் நோக்கி பயணித்த உந்துருளி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
