ஐக்கிய தேசிய கட்சியின் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ராஜித சேனாரத்ன கலந்து கொண்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (12) நடைபெற்றது.
அதன்போது, ரணில் விக்ரமசிங்கவிடம் நியமனக் கடிதத்தை பெற வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் களுத்துறை மாவட்ட அமைப்பாளருமான லக்ஷ்மன் விஜேமான்ன,
“நான் இந்த கட்சிக்காக பாரிய தியாகங்களை செய்துள்ளேன், ஆனால் நீங்கள் ராஜித சேனாராத்ன இன்று வந்த பிறகு, அவரை வைத்து கொண்டு தனியாக வேலை செய்து வருகிறீர்கள், இதன் மூலம் பாரிய தவறொன்றை இழைத்துள்ளீர்கள்”என தெரிவித்தார்.
எனினும், அவர் கூறிய எதனையும் காதில் வாங்க கொள்ளாமல் புறக்கணித்திருந்தார் ரணில்.
அதனை தொடர்ந்து, அங்கு எழுந்து நின்ற கட்சி உறுப்பினர்கள் இருவர், ரணில் விக்ரமசிங்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அமைதியாக அமருமாறு ரணில் கடுந்தொனியில் கூறிய நிலையில், குறித்த இருவரும் நிகழ்வில் இருந்து வெளியேறினர்.