வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்குட்படுத்திய சம்பவம் பதிவாகியிருந்தது.
ADVERTISEMENT
இதற்கு நீதிகோரி நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பானது வவுனியா வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



