கடந்த 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கைவிரல் பொருத்தப்பட்டது.
பிரதான சந்தேக நபர்களை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு சந்தேக நபர்கள் மறைந்திருக்கும் இடங்கள் சம்பந்தமாக தகவல் கிடைத்ததை அடுத்து யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும்பண்டார அவர்களின் தலைமையில் சுற்றி வளைப்பினை மேற்கொண்டனர்.
குறித்த சுற்றுவளைப்பில் மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் விசாரித்த போது அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கெரோயின் போதைபொருள் கைப்பற்றபட்டது.
அத்துடன் இவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரனையின் பின் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.
