பெண் வைத்தியர் மீதான பாலி யல் வன்கொடுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேரப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் நேற்றுமுன்தினம் மாலை தனது கடமைகளை முடித்துவிட்டு வைத்தியர் விடுதிக்குச் சென்ற போது முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரால் துஷ் – பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சந்தேக நபரைக் கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்தியர்கள் நாடு தழுவிய 24 மணி நேரப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இருப்பினும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, குழந்தைகள் வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.