மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் மாபெரும் இப்தார் நிகழ்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை மாலை அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்றது.
அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
சமய, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக குறித்த நோன்பு திறக்கும் மாபெரும் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது அடம்பன் பள்ளிவாசல் பிரதம மௌலவி உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





