அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வது மேலும் தாமதமானால் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (12) காலை 08 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளையதினம் கூட சந்தேகநபர் கைது செய்யப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.