இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கருத்து பகிர்வு ஒன்று இன்றையதினம்(11) நடைபெற்றது.
“பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்” என்ற தொனிப் பொருளில் இந்த கருத்துப் பகிர்வு இன்று யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் யாழ். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை பீட தலைவர் சட்டத்தரணி திருமதி கோசலை மதன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இங்கு பால் நிலை சமத்துவம், அரசியல் பிரதித்துவம், சமூகம் சமவாய்ப்பு, பெண்களுக்கு விஷேட சட்டவாக்கம், குடும்ப வன்முறைச்சட்டம், தேசவழமைச்சட்டம், பெண்களுக்கான உள்ளூர் அதிகாரசபையில் வேண்டிய சட்டம், அடிப்படை சட்ட அறிவு, பெண்களுக்கான விஷேட சட்டம், தொழில் உரிமை, மகப்பேற்று காலச்சட்டம், அரசியல் அமைப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் பிராதினி இன்பம், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.









