வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகில் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, வடமராட்சி தெற்கு,மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள் இணைந்து ஏற்பாடுநசெய்த 2025ம் ஆண்டிற்கான கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு கலாசார உத்தியோகத்தர் செல்வி சுகுணா தலமையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றலில் காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆர்மபமாகின,
தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்பு உரை ஆகியன இடம் பெற்றதனை தொடர்ந்து தலமை உரையை நிகழ்வின் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான செல்வி செல்வசுகுணா நிகழ்த்தியதை தொடர்ந்து கலைஞர்கள் அறிமுகம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகரமூர்த்தி நிகழத்தினார். அதனை தொடர்ந்து வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலைஞர்கள், வடமராட்சி கிழக்கு கலைஞர்கள் ஆகியோரின் பாரம்பரிய நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள், காத்தவராயன் கூத்து, ஏழு பிள்ளை நல்ல தங்காள், அரிச்சந்திரா மயானா காண்டம், கும்மி பாடல்கள், வாய்ப்பாட்டு உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
அத்துடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆழியவளை தவராசா பகீரதன் அவர்களால் உருவாக்கப்பட்ட சிவந்த கை எனும் பெண்களுக்கு அலுவலகங்கள், போக்குவரத்துக்களல் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்கள் தொடர்பான சமூக விழிப்புணர்வு ஒளிப்பேளை வெளியீடு இடம் பெற்றது. இதில் முதல் இறுவெட்டை இயக்குநர் தவராசா பகீரதன் வெளியீடு செய்துவைக்க கலாசார உத்தியோகத்தர்கள் செல்வசுகுணா பெற்றுக்கொண்டதை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து V.J நிதர்சனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட வறள் குறும்படம், தாயகம் மீடியாவின் உருவாக்கத்திலய ஒவிஜர் V.J நிதர்சன் எழுதிய லின்ரன் இயக்கி தாய் தின்ற பிள்ளைகள் எனும் சுனாமி நினைவு பாடல் திரையிடப்பட்டன. இவற்றின் ஆய்வுரையை ஏகன் மீடியா பிரதம ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு பிரதேச கலைஞர்கள், வடமராட்சி கிழக்கு கலைஞர்கள், நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய நிர்வாகிகள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் , ஏழுத்தாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


