SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் youtube சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த youtube இருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு இன்றையதினம் குறித்த YouTuber வந்திருந்தநேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இரண்டாம் இணைப்பு
குறித்த youtuber இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் அத்துமறி உள் நுழைந்து காணொளி பதிவு செய்துள்ளார். இந்த காணொளியில் பாவிக்கப்பட்ட சொற்பிரயோகங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.
இந்நிலையில் குறித்த யூடியூப்பர் இன்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல முயன்றவேளை பண்டத்தரிப்பு – சில்லையூர் மத்தி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது அவருடன் இன்னும் மூன்றுபேர் என மொத்தமாக நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்கு மூலம், ஊர் இளைஞர்களின் வாக்குமூலத்தை பெற்றனர். அதன்பின்னர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
வற்புறுத்தல், அத்துமீறி வீட்டினுள் உட்புகுதல், தகாத வார்த்தை பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நால்வரில் ஒருவர் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றில் பயிலுனராக பணியாற்றுவதாக அறியமுடிகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரும் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.