ஸ்வீடனை சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் புதிய உலக சாதனை படைத்தார்.
பிரான்ஸில் நடைபெற்ற ஆல் ஸ்டார் பொர்ஷே போட்டியில், அவர் 6.27 மீட்டரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக அவரே, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் போலந்தில் நடைபெற்ற போட்டியில் 6.26 மீட்டர் உயரத்தை தாண்டியது உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதை விட 1 சென்டிமீட்டர் கூடுதலாகத் தாண்டி முறியடித்திருக்கிறார்.
அவர் தன் முதல் முயற்சியிலேயே அந்த உயரத்தை எட்டினார். டியூப்லான்டிஸ் உலக சாதனையை முறியடிப்பது இது 11-ஆவது முறையாகும். கடந்த 2020 பிப்ரவரியில் போலந்தில் நடைபெற்ற போட்டியில் 6.17 மீட்டரை எட்டியதன் மூலம் அவர் தனது முதல் உலக சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.