சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்று (12)இடம்பெற்றது.
குறித்த விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் மக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



