யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பின்புற வாயிலில் கடமையில் ஈடுபடுகின்ற “சிறி” என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவன் அடாவடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் வயது முதிர்ந்த பெண்கள், மற்றும் ஆண்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு தெருச்சண்டியன் போலே செயற்படட்டு வருவதாக பாதிக்கப்பட்ட தரப்புகளால் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் சில தடவைகள் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளார். பல தடவைகள் பலரை கீழ்த்தர வார்த்தைகளை பேசி முறைகேடாக நடந்துள்ளார்.
அழகான பெண்கள் சென்றால் மன்மத லீலையை காண்பித்து அவர்களை உள்ளே செல்ல அனுமதிப்பார். இவ்வாறு ஒருதடவை பெண் ஒருவருடன் சேட்டையில் ஈடுபட முயற்சித்தவேளை அந்த பெண் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிலர் வைத்தியசாலைக்கு வரும்போது திருட்டுத்தனமாக மதுபான போத்தல்களை எடுத்து வருவார்கள். இந்த மதுபான போத்தல்கள் அவனது கைகளில் கிடைத்தால் அதனை சுருட்டிக்கொண்டு சென்று விற்பனை செய்து தனது பொக்கட்டினை நிறைப்பதாக உள்ளார்ந்த தகவல்கள் கூறுகின்றன.
தான், வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிபவானந்தராஜாவின் உறவினர் எனக்கூறி, தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் கடந்த காலங்களில் ஊடகங்கள் ஊடாக வெளிவந்தும், யாழ். போதனா வைத்தியசாலையானது இவரை வேலையில் இருந்து நீக்காமல் தொடர்ந்தும் கடமையில் வைத்திருப்பது செல்வாக்கின் அடிப்படையிலா? இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் அதிகாரம் செலுத்தப்படுகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
இவர் தொடர்ச்சியாக இவ்வாறு செய்வாரேயானால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி பாரதூரமான சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவும் உடனடியாக இவர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.

Evani pakka apede thereyala 9 pola erukku