தென் கொரியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வட கொரிய நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அருகில் இன்று தென் கொரிய விமானப் படைக்கு சொந்தமான கே. எஃப் – 16 ரக இரண்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
அதன்போது ஆயுதங்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சியில் குறித்த விமானங்களிலிருந்து 8 எம்.கே – 82 ரக வெடி குண்டுகள் அங்குள்ள ஓர் கிராமத்தின் மீது தவறுதலாக வீசப்பட்டுள்ளன.
இதில், அப்பகுதியிலுள்ள தேவாலயத்தின் கட்டடம், வீடுகள் ஆகியவை சேதமானதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.