வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி இன்று(6) இடம்பெற்றது.
பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.தவகோபால் யோகலிங்கம் தலைமையில் விருந்தினர்கள் பான்ட் வாத்தியங்களுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது
2025ம் ஆண்டிற்கான யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அருட்கலாநிதி றமேஷ் அடிகளார்(தேசபந்து) ஆரம்பித்துவைத்தார்.
அஞ்சல் ஓட்டம்,நெடுந்தூர ஓட்டங்கள்,குறுந்தூர ஓட்டங்கள்,பழைய மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன
விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அமலமரித்தியாகிகள் சபையின் செயற்றிட்ட இணைப்பாளர் அருட்கலாநிதி றமேஷ்(தேசபந்து)அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரன் அவர்களும்,நித்தியவெட்டை ஆரம்பபிரிவு வைத்தியசாலை வைத்தியர் DR.திவ்யா அவர்களும் கலந்து கொண்டதுடன் பழைய மாணவர்கள்,பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




