அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து முட்டை கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது
முட்டை விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மெக்சிக்கோவிலிருந்து எல்லை வழியாக முட்டை கடத்தலில் ஈடுபட முயல்பவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2024ம் ஆண்டின் பின்னர்முட்டை விலைகள் 158 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்பு பிரிவு இந்த வருடம் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 29 வீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் 2022 முதல் அதிகரித்து வரும் பறவைகாய்ச்சல் காரணமாகவே முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 2022 முதல் கோழிகள் பறவை காயச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் 166 மில்லியன் பறவைகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்கள் பயணம் செய்யும் மக்களிற்கு எங்களின் விவசாய துறையை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தவேண்டியது அவசியம் என சிபிபீ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் 24 முட்டைகளை அமெரிக்காவிற்கு கொண்டுவர முயற்சி செய்தார், அதிகாரிகள் அவற்றை கொள்வனவு செய்வதை பார்த்தேன் என மெக்சிக்கோ எல்லையிலிருந்து சான்டியாகோவை சேர்ந்த ஜொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.