யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.
அந்தவகையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது.



