புத்தளம் மாவட்டம், கற்பிட்டி – கண்டக்குளி கடற்பரப்பில் நேற்று மாலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மூவரின் மீது மின்னல் தாக்கி ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் மயங்கிய நிலையில் படகுகளுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடலில் வீழ்ந்தவரின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை. சடலத்தைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
உயிர் தப்பிய இருவரும் 28 மற்றும் 46 வயதுடையவர்கள்.
மேற்படி இருவரிடமும் கற்பிட்டி பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.