யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை நேற்றைய தினம் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Posts
ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு
மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்...
நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!
உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...
வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...
வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...
நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!
கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...
வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...
அநுர அரசால் நாடு வீழ்ச்சிப் பாதையில்.!
தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நாட்டின்...
கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!
இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்...
அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் பூஜ்ஜியம்; பொய்களாலேயே ஆட்சியை நடத்துகின்றனர்.!
அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு...
சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!
பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்....










