சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறும் சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் பாடசாலை மாணவர்கள் மறுநாள் பாடசாலைக்கு செல்லும் போது பல்வேறு அசௌகரிங்களுக்கு முகங்கொடுப்பர்.
இதன்காரணமாக அம்மாணவர்களின் நலன் கருதி ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடுமுறைக்கான கற்றல் நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடந்த (20.02.2025) திகதி அறிவித்துள்ளார். அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும்.