• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

admin by admin
May 10, 2025
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்ட போது கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல் திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு பொலிசார் தமிழ் மக்கள் மூவரை இன்று (10.05.2025) கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம் சென்று கலந்துரையாடியுள்ளதுடன், தமிழ்மக்கள் தமது பயிற்செய்கை நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் சுதந்திரம் மறுக்கப்படக்கூடாதெனவும், இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்குதியில் தமது வயல்காணிகளை பண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட சாமித்தம்பி ஏகாம்பரம், சிறீரத்தினம் கஜரூபன், வரதன் இளமாறன் ஆகிய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்கல் இடப்பட்ட பகுதிகளுக்குள் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்படுள்ளனர்.

இந்த விடயத்தினை அறிந்தவுடன் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து, கைது செய்யப்பட்ட மூன்று பேருடனும் கலந்துரையாடியிருந்தேன்.

அத்தோடு பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியதில், தமக்கு வவுனியாவில் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், தொல்லியல் திணைக்களத்தின் பகுதிக்குள் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபட்டதற்காகவே தம்மால் குறித்த மூவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.

அத்தோடு 11.05.2025 நாளை கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். இருப்பினும் இந்தக் காணிகள் அனைத்தும் அந்த மக்களுக்குரிய காணிகள் என்பதை பொலிஸ் பொறுப்பதிகாரிக்குத் தெளிவுபடுத்தினேன். ஏற்கனவே மக்கள் பயிற்செய்கை மேற்கொண்ட காணிகளில், மக்களைத் தொடர்ந்து பயிற்செய்கை மேற்கொள்ள விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் சீர்கேடான செயற்பாடுகளே இங்கு இடம்பெற்று வருகின்றன என்பதையும் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தேன்.

இந்த விடயத்திலே தொல்லியல் திணைக்களமானது தமது எண்ணத்திற்கு ஏற்றவாறு எல்லைக்கற்களையிட்டு இக்காணிகளை வைத்திருந்தால் மக்கள் எங்கே விவசாயம் செய்வது.மக்கள் தமது காணிகளுக்குள் சுதந்திரமாகச் சென்று பயிற்செய்கை செய்வதற்கான அவர்களது சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளே இந்த நாட்டில் தற்போது இடம்பெறுகின்றது.

குறிப்பாக தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் ஆகிய மூன்று இடங்களும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு எமது மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல், இந்த இடங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்ளப்போகின்றனரோ என்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு இருக்கின்றது. இத்தகைய சூழலில் தமிழ்மக்கள் தமது பூர்வீக விவசாயக் காணிகளில் பயிற்செய்கை மேற்கொண்டு தமது வாழ்வாதரத்தை ஈட்டுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளில் வனவளத்திணைக்களம், வனஜீவராசிதிணைக்களம், தொல்லியல்திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களால் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்று தான் நான் அரசாங்கத்தைக் கோருகின்றேன்” என்றார்.

Related Posts

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

by selvan
June 13, 2026
0

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து...

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

by selvan
June 13, 2026
0

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி ஒருவருக்கு இரண்டு நாள்கள் பணி இடைநிறுத்தம் செய்து வடக்கு...

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பகுதியில் நேற்று...

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

by selvan
June 13, 2026
0

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிதுள்ளர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்...

குழந்தையை கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து விபத்தில் உயிரிழப்பு!

by selvan
June 13, 2026
0

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் அவுலேகம பகுதியைச்...

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வல்லிபுரக்குறிச்சி பகுதியைச்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக...

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

by selvan
June 13, 2026
0

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வாகனமும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி