வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் திங்கட்கிழமை (24) கூடியது. இதன் போதே பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT