• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கெங்காதேவி துறைமுகத்தில் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் – மீனவர்கள் குற்றச்சாட்டு!

Bharathy by Bharathy
February 24, 2025
in இலங்கை செய்திகள்.
0
கெங்காதேவி துறைமுகத்தில் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் – மீனவர்கள் குற்றச்சாட்டு!
Share on FacebookShare on Twitter

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரண்டு நிதியும் ஒரு திட்டத்திற்கு வழங்க முடியாது என்று கூறி 10 இலட்சம் ரூபாவினை எமக்கு வழங்காது திருப்பி அனுப்பிவிட்டனர். எட்டு இலட்சம் மட்டுமே எமக்கு வழங்கப்பட்டது.

எட்டு இலட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் செய்கின்ற அபிவிருத்தியால் எமக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கிடைத்த 8 இலட்சம் ரூபா நிதியினை அநியாயம் செய்கின்றனர். படகுகளை நிறுத்தி வைக்கும் பகுதிக்குள் அதிக மண் உள்ளதால் அந்த பகுதி உயரமாக காணப்படுன்றது. இதனால் அந்த பகுதிக்குள் தண்ணி இல்லாத காரணத்தால் படகுகளை துறைமுகத்தின் உள்ளே கொண்டுவந்து நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

ஆகையால் நாங்கள், இரண்டு புறமும் உள்ள தடுப்புகளை நீக்குமாறு எமது வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். இரண்டு பகுதிகளிலும் உள்ள தடுப்புகளை நீக்கினால் மண் வெளியே செல்லும். இதன்போது படகுகளை துறைமுகத்துக்குள் கொண்டுவரக்கூடிய நிலை ஏற்படும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் வெறுமனே ஆழப்படுத்தலில் ஈடுபடுகின்றார்கள். நாங்கள் பல தடவைகள் கூறியும் எமது கருத்துக்களுக்கு செவி சாய்க்கவில்லை. 121 மணித்தியாலங்கள் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஆழப்படுத்துவதே அவர்களது வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு ஆழப்படுத்தினாலும் மீண்டும் அந்த இடம் மூடுப்படும்.

இது குறித்து யாழ். மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் கெங்காதரன் தர்சனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாக ஆழப்படுத்தும் பகுதியில் 5 மீற்றர் எல்லையை குறைத்து ஆழப்படுத்துமாறு, வேலைத்திட்டத்தை செய்பவர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன் எமது கடற்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கு அனுமதி கேட்டனர். சுற்றுலா மையம் அமைத்தால் எமது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பல தடவைகள் அழைப்பு மேற்கொண்டு அனுமதி வழங்குமாறு கோரினர். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கும் சேர்த்து பழிவாங்குவது போல் உள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர்.

Related Posts

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

by selvan
June 29, 2026
0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் தான சாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்டோர்ஸ் வளாகத்தில் அதன் உரிமையாளரின் ஏற்பாட்டில் ஜஸ்கிரீம்...

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

by selvan
June 29, 2026
0

கேகாலை மாவட்டம், கலிகமுவை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அவரது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கலிகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே...

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது!

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது!

by selvan
June 29, 2026
0

லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைப்பதாக அறிவித்துள்ளது.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, தமது எரிபொருள் விலையை திருத்துவதாக அந்த நிறுவனம்...

பெட்ரோலின் விலை குறைப்பு!

பெட்ரோலின் விலை குறைப்பு!

by selvan
June 29, 2026
0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல்...

சமஸ்டிக்காகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது – சுமந்திரன் தெரிவிப்பு!

சமஸ்டிக்காகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது – சுமந்திரன் தெரிவிப்பு!

by selvan
June 29, 2026
0

சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என,இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது  என இலங்கை தமிழரசுக்  கட்சியின் பொதுச்செயலாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ ...

யாழ். மறை மாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

யாழ். மறை மாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

by selvan
June 29, 2026
0

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், அவர்கள் திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய ஆயர் பேரருட்தந்தை...

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

by selvan
June 29, 2026
0

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான "முழு அதிகாரம்" கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு...

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

by selvan
June 29, 2026
0

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனை நடவடிக்கைகளில் 32 மோட்டார் சைக்கிள்களும்  ஒரு முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28)...

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

by Mathavi
June 29, 2026
0

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி