வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுத்தி வங்கியின் பொதுச் சபை கூட்டமும் புதிய கட்டுப்பாட்டு சபை நிர்வாகத் தெரிவும் இன்று இடம்பெற்றது.
மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை தலைவர் திரு வேலுப்பிள்ளை வேலாயுதம்பிள்ளை தலைமையில் இன்று(19) முற்பகல் பத்து மணி அளவில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி கலந்து கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் கட்டுப்பாட்டு சபையின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்