“பிடியளவு கமநிலத்திற்கு” எனும் தொனிப்பொருளின் கீழ் உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வுகள் நேற்றையத்தினம் யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உரும்பிராய் கமநல சேவைகள் நிலையப் பிரிவில் உதவி ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவன் தலைமையில் ஆரம்பமாகியது.
இவ் நிகழ்வில் உரும்பிராய் கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோப்பாய் வடக்கு மத்தி கிராம சேவையாளர், விவசாயப் போதனாசிரியர் மற்றும் கமநல சேவைகள் பிரிவிற்குட்பட்ட கமக்கார அமைப்பினுடைய விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு கோப்பாய் வடக்கு மத்தி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட விவசாயிகளுக்கு அறிவித்தல் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு வயற்காணிகள் பயிர்ச் செய்கை செய்யாமைக்கான காரணங்களும் கேட்டறியப்பட்டது.



