மன்னாகண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியிலுள்ள கோயில் குளக்கட்டு பின்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றையதினம் (15.02.2025) மாலை குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசன், தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பில் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். அத்தோடு குறித்த அதே பகுதியில் உடமையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 37, 36,29 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு தப்பியோடிய பிரதான சந்தேகநபர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
