காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் கெசல்கமு ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகல்வி ஈடுபட்ட மூவர் கைது.
நேற்று 15ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற்ற சுத்திவிளை பின் போது சட்டவிரோதமான முறையில் கெசல் கமு ஓயாவில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்கள் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட போது இவர்களிடம் இருந்து மாணிக்க கற்கள் அகழ்விற்கு பயன் படுத்திய உபகரணங்களை சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது 27 வயது 47 வயது உடையவர்கள் எனவும் அவர்கள் பொகவந்தலாக மற்றும் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து பொகவந்தலாவ பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.