இபலோகம பொலிஸ் பிரிவின் ஹிரிபிடியாகம காகம வீதியின் பஹளவெம்புவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (15) உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.
இச் சம்பவத்தில் பஹளவெம்புவ, இபலோகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 29 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.