பல்வேறு குற்றங்கள் தொடர்பாக பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபரும் அவரது 25 வயது மனைவியும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜம்பட்டா தெரு, கொழும்பு 15 சேர்ந்த 30 வயதடைய புஷ்பராஜ் வின்னேஸ்வரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் 2017 இல் கொட்டஹேன பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தமை, 2018 இல் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் துப்பாக்கியை வைத்திருந்தமை, கொட்டஹேன பொலிஸ் பிரிவில் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் வைத்திருந்தமை, 2022 இல் கடலோர காவல் பிரிவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்தமை, சூதாட்டம் ஆகிய குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது மனைவியும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்,
மேலும், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.