இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்டத்தின் கீழ் ஒரு நாள் பயிற்சி பட்டறையானது இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட சர்வமத பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பெண்கள், இனம் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவினர் மீது கவனம் செலுத்துவது தொடர்பான முக்கிய சட்டம் மற்றும் கொள்கைகள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் வளவாளராக Dr ஜீவ சுதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





