சென் லூக்கஸ் மெதடிஸ் மருத்துவமனைக்கு நிதி சேகரிப்பதற்க்காக நான்கு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் ஆரம்பமான துவிச்சக்கர வண்டி பயணம் இன்று பருத்தித்துறை வியாபாரிமூலை பகுதியை வந்தடைந்து அங்கிருந்து நெல்லியடி வல்லை ஊடக புத்தூர் சென் லூக்கஸ் மெதடிஸ்த மருத்துவமனை வரை சென்றது.
புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் ஆர்வலர்கள் 70 பேர் குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை பருத்தித்துறை வியாபாரிமூலை மக்கள் மற்றும் DJ கல்விநிலைய மக்கள் வரவேற்பளித்தனர்.


