சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் இன்று (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இன்று இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று நானேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக டேன் பிரியசாத்துக்கு எதிராக நிகவரெடிய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக, கல்கமுவ நீதவான் நீதிமன்றம் டேன் பிரியசாத்துக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தது.
நிகவெரட்டிய பொலிஸார் விடுத்த பிடியாணை உத்தரவுக்கு அமைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவரை நிக்கவெரட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.