9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நேற்று இரவு (7) சீனாவில் ஆரம்பமாகியது.
அதன்படி, இம்முறை போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹார்பினில் உள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைத்தார்.
வண்ணமயமான பல நிகழ்வுகளுடன் ஆரம்பமான 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய கண்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1270க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நான்கு விளையாட்டு வீரர்கள் இந்த ஆண்டு 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.