வவுனியா – பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதன் பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுவினர் வவுனியா, பெரியார்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 50 போதை மாத்திரைகள் இளைஞர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபராவார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.