கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் அந்த வர்த்தகர்களுக்கு 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தனது அறிவிப்புகளில் தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய அதிகாரசபையால் நடத்தப்படும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நாடு முழுவதும் கூடுதல் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடப்புஸ்ஸல்லாவ, நாவலப்பிட்டி, உலப்பனைன், தென்னகும்புர, குண்டசாலை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளைத் தேடுவதற்காக இன்று (28) 05 கூடுதல் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன். பொலிஸாரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளில், அதிக விலைக்கு அரிசி விற்ற இரண்டு நிறுவனங்கள் உட்பட 25 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.