2024ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், சுயேட்சை குழுக்களின் அபேட்சகர்கள் 17 பேருக்கும் மற்றும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சை குழுக்களின் தலைவர்கள் 9 பேருக்கும் எதிராக இன்று(28) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி முகம்மது சுல்தான் நஜீம் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கையானது தேர்தல் திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைவாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!
யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று பிற்பகல் 6 மணிக்கு யாழ். யாழ்.மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய்...